ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை
ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு
Updated on
1 min read



மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Audit Officer
பணி: Assistant Accounts Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant 
பணி: Inspector of Income Tax
பணி: Inspector, (Central Excise)
பணி: Inspector (Preventive Officer)
பணி: Inspector (Examiner)
பணி: Assistant Enforcement Officer
பணி: Sub Inspector 
பணி: Inspector Posts
பணி: Inspector 
பணி: Divisional Accountant
பணி: Junior Statistical Officer
பணி: Statistical Investigator Grade-II
பணி: Auditor
பணி: Accountant
பணி: Accountant/ Junior Accountant
பணி: Tax Assistant
பணி: Upper Division Clerks

சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100 

வயது வரம்பு:  குறைந்தபட்சம் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு தகுதந்தவாறு வயதுவரம்பு மாறுபடும். 

தகுதி: உதவி கணக்காளர், கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ படிப்பு கூடுதல் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை புள்ளியியல் அலுவலர் பணியிடத்திற்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பிளஸ் டூவில் கணித பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாக செலுத்தலாம். 

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நவம்பர் 27க்குள்ளும், வங்கியின் மூலம் நவம்பர் 29க்குள்ளாகவும் செலுத்தலாம். 

தேர்வு நடைபெறும் தேதி: முதல் நிலைத் தேர்வுகள் 2019 மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும்.  தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

தெற்கு மண்டல எஸ்எஸ்சி அலுவலக முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, 2 nd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai, Tamil Nadu-600006. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com