நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நிரப்பப்பட உள்ள 91 விரிவாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான
Published on



நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நிரப்பப்பட உள்ள 91 விரிவாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 91

பணி: Development Assistant - 82

பணி: Development Assistant (Hindi) - 09

தகுதி: Development Assistant  பணிக்கு ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Development Assistant (Hindi) பணிக்கு ஹிந்தி, ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.32,000

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றிதிறனாளிகள் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கியின் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nabard.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 14.09.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com