வங்கியில் வேலை வேண்டாமா உங்களுக்கு? அழைக்கிறது பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

வட இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்தியப் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 168 சிறப்பு அதிகாரி
வங்கியில் வேலை வேண்டாமா உங்களுக்கு? அழைக்கிறது பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
Published on
Updated on
1 min read


வட இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்தியப் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 168 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 168 

பணி: சிறப்பு அதிகாரி

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.psbindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 826 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ. 177 செலுத்த வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.psbindia.com/content/recuitment  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com