துணை ராணுவப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
By | Published On : 26th April 2019 04:25 PM | Last Updated : 26th April 2019 04:25 PM | அ+அ அ- |

துணை ராணுவப்படையில் ஒன்றான இந்திய திபெத் எல்லைக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள 121 காவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indo Tibetan Border Police
மொத்த காலியிடங்கள்: 121
பணி: Constable (GD)
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 21.06.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று பதக்கம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையில் முதல் முறை தேர்ச்சி பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி மீணடும் மருத்துவ பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21,06.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/4/26/ITBP-Recruitment-2019-121-Constable-GD-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.