யூனியன் வங்கில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்..?
By ஆர்.வெங்கடேசன் | Published On : 05th February 2019 02:50 PM | Last Updated : 05th February 2019 02:50 PM | அ+அ அ- |

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா-வில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Armed Guard
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் https://www.unionbankofindia.co.in/pdf/COMMON-NOTIFICATION-AG-RECRUITMENT-4.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2019
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...