விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
By | Published On : 04th January 2019 02:27 PM | Last Updated : 04th January 2019 02:27 PM | அ+அ அ- |

தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள பாய்லர் இயக்குபவர்(செமி ஸ்கில்டு சி) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாகும்.
மொத்த காலியிடம்: 15
பதவி: Semi Skilled (C) (Boiler Operator) - 13
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இசிஇ, இஇஇ துறைகளில் டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று Boiler Attendant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Fitter, Electrician, Instrument Mechanic போன்ற பிரிவுகளில் ஐடிஐ முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் Boiler Attendant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.12.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.29,775, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.29,226 வழங்கப்படும்.
பதவி: TG Operator Semi Skilled (C) - 02
சம்பளம்: மாதம் ரூ.29,775
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இசிஇ, இஇஇ பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் வேண்டிய முகவரி:
THE CHIEF GENERAL MANAGER-HR
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM–639136, KARUR DISTRICT, TAMIL NADU
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2019
மேலும் முழுயான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் பெற http://www.tnpl.com/Careers/tnpl_boiler&tg-operator_21-12-18.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.