விவசாயம், கால்நடை அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை!
By | Published On : 04th January 2019 02:47 PM | Last Updated : 04th January 2019 02:47 PM | அ+அ அ- |

அரியலூரில் செயல்பட்டு வரும் "Krishi Vigyan Kendra"-இல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Subject Matter Specialist(Animal Science)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Veterinary Sciences, Animal Sciences துறையில் முதிகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Programme Assistant(Farm Manager)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "CREED Krishi Vigyan Kendra" என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, உதயநந்தம்(கோடு எண்.6719) மாற்றத்தக்க வகையில் டி.டி.ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kvk.creed.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman, ICAR-Krishi Vigyan Kendra (Hosted by CREED), Cholamadevi Post, Jayankondam (via), Udayarpalayam Taluk, Ariyalur District – 612 902, Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kvk.creed.co.in/pdf/Notification274.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.