எல்.ஐ.சி-ல் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
By ஆர்.வெங்கடேசன் | Published On : 05th March 2019 02:31 PM | Last Updated : 05th March 2019 02:31 PM | அ+அ அ- |

அனைவராலும் எல்ஐசி என அழைக்கப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 590 உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ]
மொத்த காலியிடங்கள்: 590
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: AAO (Generalist) - 350
பணி: AAO (IT) - 150
பணி: AAO (CA) - 50
பணி: AAO (Actuarial) - 30
பணி: AAO (Rajbhasha) - 10
தகுதி: பட்டதாரிகள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எல்க்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்தவர்கள், எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரைவுள்ள தாள்களையும், குறைந்தபட்சம் 4 தாள்களையும் முடித்தவர்கள் ஆக்சுவரியல் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32795- 1610(14) –55335– 1745(4) –62315 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இருகட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.licindia.in/getattachment/59fa2d3e-40ad-4c4b-916d-95a58ee64123/Recruitment-of-Assistant-Administrative-Officer-20 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019