வேலை வேண்டுமா? தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள
வேலை வேண்டுமா? தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை


தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தினை தொகுப்பூதியத்தில் ஓப்பந்த அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: சமூகப் பணியாளர் - 01

சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 வழங்கப்படும்.

தகுதி: உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வேலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான www.vellore.nic.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பதவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் - 632001.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும். 

இப்பணியிடம் குறித்த மேலும் முழுமையான விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.vellore.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019103131.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019103146.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com