தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு
தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஓட்டுநா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா்

சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7-வது ஊதியக்குழு மற்றும் அரசாணை எண்.171 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் 30.11.2018ன் படி அட்டவணை-IIIன் படி மாதம் ரூ.15,900 - 50,400 என்ற சம்பள விகிதத்தில் சம்பளம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி அருந்ததியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களுக்கும் அழைப்புக்கடிதம் விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி பிரிவிலும், ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, காலிப்பணியிடங்கள், இன சுழற்சி உள்ளிட்ட விவரங்களை https://dharmapuri.nic.in/notice/dharmapuri-district-gram-panchayat-secretary-requirement-announcement-2019/ என்கிற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2019/11/2019111147.pdf என்ற லிங்கை கிளிக் செய்க. 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com