ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
By ஆர். வெங்கடேசன் | Published on : 17th November 2019 07:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வேலூர் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஊராட்சி செயலாளர்
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.15,900
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி அருந்ததியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களுக்கும் அழைப்புக்கடிதம் விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), ஆலங்காயம் வட்டாரம், வேலூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.11.2019