சுடச்சுட

  
  nabardbank  நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நிரப்பப்பட உள்ள 91 விரிவாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  மொத்த காலியிடங்கள்: 91

  பணி: Development Assistant - 82

  பணி: Development Assistant (Hindi) - 09

  தகுதி: Development Assistant  பணிக்கு ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Development Assistant (Hindi) பணிக்கு ஹிந்தி, ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  வயதுவரம்பு: 01.09.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  சம்பளம்: மாதம் ரூ.32,000

  தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

  விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றிதிறனாளிகள் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கியின் ஆன்லைனில் செலுத்தலாம்.

  விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  தேர்வு நடைபெறும் தேதி: 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். 

  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nabard.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 14.09.2019

  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.10.2019

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai