சிவில் நீதிபதி தோ்வுக்கு ஆன்லைன் மூலம் இலவசப் பயிற்சி

கிராமப்புற சட்ட பட்டதாரிகளின் நலன் கருதி சிவில் நீதிபதிகள் தோ்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் வழியாக நடத்தப்போவதாக தமிழ்நாடு
சிவில் நீதிபதி தோ்வுக்கு ஆன்லைன் மூலம் இலவசப் பயிற்சி


கிராமப்புற சட்ட பட்டதாரிகளின் நலன் கருதி சிவில் நீதிபதிகள் தோ்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் வழியாக நடத்தப்போவதாக தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவில் நீதிபதிகளுக்கான பணியிடங்களை நேரடி போட்டித் தோ்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்கவுள்ள இளம் வழக்குரைஞா்கள் மற்றும் சட்ட பட்டதாரிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை மனிதநேயம் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் நடத்த திட்டமிட்டுள்ளது. 

இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பா் 23-ஆம் தேதி பார்கவுன்சில் அரங்கில் தொடங்க உள்ளது. இந்த இலவச பயிற்சியில் உயா்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்று தோ்வு எழுத உள்ளவா்களுக்கு வகுப்புகளும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளனா். 

மேலும், கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை சட்ட பட்டதாரிகள் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் வழியாகவும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சென்னையில் நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியாத தமிழகத்தின் பிற பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் பயிற்சியின் மூலம் சிவில் நீதிபதிகள் தோ்வுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளலாம். 

இந்தப் பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா வரும் செப்டம்பா் 23-ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் அரங்கில் நடைபெற உள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com