எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி: பட்டதாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழிற்திறன்
எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி: பட்டதாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!


பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: SBI - Apprenticeship

காலியிடங்கள்: 700

வயதுவரம்பு: 31.08.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்பிஐ வங்கியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு மையம்: ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முதன்மை நகரங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2019

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com