தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 242 உதவி பொறியாளர், உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை
Updated on
1 min read


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 242 உதவி பொறியாளர், உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 13 -ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 26 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 242
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Assistant Engineer (AE) - 78 
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
2. Environmental Scientist - 70 
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
3. Assistant (Junior Assistant) - 38 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
4. Typist - 56 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது கெமிக்கல், சுற்றுச்சூழல் பிரிவில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள், அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், கணினி படிப்பில் டிப்ளமோ, ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரிவில் தட்டச்சு மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 12.02.2029 தேதியின்படி 18 முதல் 30 வயத்திற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகள் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com