மத்திய அரசின் சர்வே இந்தியாவில் ஓட்டுநர், மெக்கானிக் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சர்வே இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 14 ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு
situation vacant
situation vacant
Updated on
1 min read

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சர்வே இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 14 ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

நிறுவனம்: Survey of India

பணி: Motor Driver – cum Mechanic

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் செய்முறை, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப முறை: www.surveyofindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.surveyofindia.gov.in/files/MTD_Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com