

தில்லி உயர்நீதிமன்றத்தால் நடத்தப்படும் Judicial Service தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: Delhi Higher Judicial Service Examination
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.1,31,100 - 2,16,600
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தபட்சம் 7 ஆண்டு வழக்குரைஞராக பணியாற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தில்லி உயர்நீதிமன்றத்தால் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.delhihighcort.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.delhihighcort.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.