

இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள 21 நாடாளுமன்ற நிருபர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 21
பணி: Parliamentary Reporter
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று, ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 160 வார்த்தைகளை எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.01.2020 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://loksabhaph.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Recruitment Branch, Lok Sabha Secretariat, Room No. 521, Parliament House Annexe, New Delhi-110001
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/approved%20_Final%20Advt%202-2019%20(Reporter).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.