நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 73 அலுவலக உதவியாளர்
நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Updated on
1 min read

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 73 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 73

பணி: Office Attendant

தகுதி:  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.12.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 10,940 - 23,700

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் முதன்மைத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்:  விண்ணப்பக் கட்டணம் ரூ.400, அறிவிப்பு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ. 450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2412190027Final%20-%20Advertisement%20-%20Group%20C%20-Office%20Attendant%20-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com