வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை

அரசு வேலைக்காக காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை
Updated on
1 min read


அரசு வேலைக்காக காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 600

பணி இடம்: தமிழ்நாடு முழுவதும்

பணி: Assistant Engineer (AE)  - 600

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:     
1. Assistant Engineer (AE) Electrical - 400
2. Assistant Engineer (AE) Mechanical - 125
3. Assistant Engineer (AE) Civil - 75

சம்பளம்: மாதம் ரூ. 39800 - 1,26,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com