கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு
கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளை நிரப்புதவற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவும். 

நிறுவனம்: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.

மொத்த காலியிடங்கள்:     80

பணியிடம்: காஞ்சிபுரம்

பணி: அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்: 

வங்கி: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 
பணி: அலுவலக உதவியாளர் - 39 
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 31,650/-

பணி: ஓட்டுநர் - 05
சம்பளம்: மாதம் ரூ.11,250 - 33,075

வங்கி: நகர கூட்டுறவு வங்கி 
பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,200  - 25,250

வங்கி: நகர கூட்டுறவு கடன் சங்கம்
பணி: அலுவலக உதவியாளர்  - 07
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 34,700 

வங்கி: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி 
பணி: அலுவலக உதவியாளர் - 11
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 35,150

பணி: அலுவலக உதவியாளர்- 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 27,610

தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதும், இலகுரக ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150  செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளTN Cooperative Bank Recruitment 2020 அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு அறிவிப்பு லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com