தமிழக மீன்வளத் துறையில் உதவியாளர் வேலை வேண்டுமா?
By | Published On : 13th March 2020 02:33 PM | Last Updated : 13th March 2020 02:33 PM | அ+அ அ- |

தமிழக மீன்வளத்துறையின் அசூர் மீன் பண்ணையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன்வளத்துறையில் அசூர் மீன் பண்ணையில் இரண்டு மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டும், ஆதிதிராவிடர், அருந்ததியினர் பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடத்திற்குத் தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், நீச்சல், வலை பின்னுதல், அறுந்த வலைகளைச் சரி செய்தல், வலை வீச தெரிந்திருக்க வேண்டும். மீனவர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tiruchirappalli.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மீன்வளத்துறை இயக்குநர் (மண்டலம்), திருச்சி 17/2, சமது பள்ளித்தெரு, காஜா நகர், திருச்சி - 620020.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.04.2020
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...