ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:30 am

தினமணி


இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: C-02/2021

பணி: Works Engineer/Civil

காலியிடங்கள்: 60

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Works Engineer/S & T
காலியிடங்கள்: 14
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Electrical, Electronics, Electronics and Communication, Electronics and Instrumentation, Computer Science, Instrumentation and Control பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமீபத்திய புகைப்படம் கையொப்பம், சான்றிதழ்களை ஸ்கேன் செய்து  பிடிஎஃப் அமைப்பில் மாற்றி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM/HRM, Ircon-International Ltd, C-4, District Centre, Saket, New Delhi - 110017.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2021
மேலும் விவரங்கள் அறிய என்ற www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படிதது தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.