இந்தோ திபெத்திய எல்லை காவல்படையில் வேலை

இந்தோ திபெத்திய எல்லை காவல்படையில் வேலை

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: GDMO
காலியிடங்கள்: 77
சம்பளம்: மாதம் ரூ.75,000

பணி: Specialist
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.85,000
வயதுவரம்பு: 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்துவ பிரிவில் சம்மந்தப்பட்ட பிரிவில் தகுதி பெற்றிருப்பதுடன் போதிய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், Rotated Internship முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.itbpolice.nic.in அல்லது www.itbp.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படித்து அதன்படி விண்ணப்பம் மற்றும் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2021 மற்றும் 17.05.2021

மேலும் விவரங்கள் அறிய www.itbpolice.nic.in அல்லது www.itbp.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com