விண்ணப்பிப்பது எப்படி? வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் வேலை

வேளாண்மை மற்றும் விவசாய நலப்பிரிவின் கீழுள்ள வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் வேலை
Updated on
1 min read


வேளாண்மை மற்றும் விவசாய நலப்பிரிவின் கீழுள்ள வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officer 

காலியிடங்கள்: 44

பணி: Finance & Account Officer

காலியிடங்கள்: 21

வயதுவரம்பு: 23.08.2021 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.asrb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2021

மேலும் வயதுவரம்பு சலுகை, முழுமையான கல்வித்தகுதி குறித்த விவரங்கள் அறிய http://www.asrb.org.in/images/Notification-AO-and-F-AO-Examination-2021.pdf​ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com