வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? 

இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், எம்டிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? 


இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், எம்டிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : வருமான வரித்துறை 

மொத்த காலியிடங்கள்: 07 

பணி: Tax Assistant - 05 
தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100 

பணி: Multi Tasking Staff - 02 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900 

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://incometaxindia.gov.in/Pages/default.aspx என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Deputy Commissioner of Income-Tax (HQ)(Admn.) O/o the Principal Chief Commissioner of Income-Tax, Kerala, C.R. Building, I.S. Press Road Kochi 682018  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2021 

மேலும் விபரங்கள் அறிய https://incometaxindia.gov.in/Pages/default.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com