Enable Javscript for better performance
தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

    Published on : 25th January 2021 10:56 PM  |   அ+அ அ-   |    |  

    aavin


    கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    விளம்பர எண்.4545/ESTT-1/2021

    நிறுவனம்: கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கம்

    மொத்த காலியிடங்கள்: 15

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
    பணி: Manager(Shemes) - 01
    சம்பளம்: மாதம் ரூ.55,500 - 1,75,700

    பணி: Manager (Transport) - 01
    பணி: Manager (Feed & Fodder) - 01
    பணி: Manager (Purchase/Stores) - 01
    சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

    பணி: Deputy Manager(Dairying) - 04
    பணி: Deputy Manager (Dairy Chemist) - 03
    பணி:Deputy Manager (Dairy Bacteriology) - 01
    சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800

    பணி: Private Secretary Grade-III - 01
    பணி: Executive (Civil) - 01
    சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63600 

    தகுதி: ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

    வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி அனைத்து பணியிடங்களுக்கும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

    தேர்வு  செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The General Manager, T.D.C.M.P.U. Ltd., Coimbatore. பெருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
    The General Manager, T.D.C.M.P.U. Ltd.,
    Kalampalayam Post, Coimbatore - 641 010

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2021

    மேலும் விவரங்கள் அறிய www.aavinmilk.com அல்லது https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application%202021.pdf/3de38662-352b-e3d5-aeff-eb58b2a8869d என்ற அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp