அரசு மீன்வளத்துறையில் வேலை: - விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம்
அரசு மீன்வளத்துறையில் வேலை: - விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?


தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம், மீன் வளத்துறையில் நலத்துறையில் நிரப்பப்பட உள்ள ஃபிட்டர், நெட்மெண்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஃபிட்டர் - 01

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சீட் மெட்டல் ஒர்க் ஃபிட்டர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவன (ஐடிஐ) சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: நெட்மெண்டர் - 03

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி மற்றும் மீன் பிடி வலைகள் தயாரித்தல், சரி செய்தல் பற்றிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இயக்குநர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை - 600013.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com