BHEL நிறுவனத்தில் பொறியாளர், சூப்பர்வைசர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
By ஆர். வெங்கடேசன் | Published On : 16th September 2021 10:00 AM | Last Updated : 16th September 2021 06:02 AM | அ+அ அ- |

newbhel063825
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். PSER-01/2021
பணி: Engineer (FTA-Civil)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.71,400
வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Supervisor (FTA-Civil)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.39,670
வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்பிஐ கலெக்ட் அல்லது BHEL PSER Kolkata என்ற பெயரில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://pser.bhel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் டி.டி இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Deputy General Manager(HR), BHEL, Power Sector Eastern Region, BHEL Bhawan, Plot No.DJ-9/1,Sector-II, Salt Lake City, Kolkata - 700 091
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 01.10.2021