அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப செயலாக்க மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

anna university

anna university
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப செயலாக்க மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். 2122IN/TEC/CTDT
பணி: Technology Commercialization Executive
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 50,000
தகுதி: பொறியியல துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்பிஏ தேர்ச்சியுடன் டெக்னாலஜி மேனேச்மெண்ட், புரடெக்சன் மேனேச்மெண்ட், பிசினஸ் டெவலப்மெண்ட் புரடெக்சன் புரமோசன் பிரிவில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 40,000
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி தேர்ச்சியுடன் சேல்ஸ் கோ-ஆர்டநேஷன், பைல் மேனேச்மெண்ட், ஆபிஸ் மெனேச்மெண்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங், டேட்டா மேனேச்மெண்ட் பிரிவில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: பொறியியல துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.காம், எம்.எஸ்சி தேர்ச்சியுடன் வெப்சைட் டெவலப்மெண்ட் மற்றும் மேனேச்மெண்ட், சேல்ஸ் சப்போர்ட் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டாக்குமெண்டேஷன் பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant cum Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauni.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் முழுவிவரங்கள் அடங்கிய பயோ-டேட்டா மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai - 600025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.09.2021
மேலும் விவரங்கள் அறிய www.annauni.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...