விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவ முகாமில் குரூப் 'சி' வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவ முகாமில் காலியாக உள்ள குரூப் 'சி'  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவ முகாமில் குரூப் 'சி' வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Updated on
1 min read


ராணுவ முகாமில் காலியாக உள்ள குரூப் 'சி'  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: MTS(Safaiwala) - 10
பணி: Washerman - 03
பணி: Mess Waiter - 06
பணி: Masalchi - 02
பணி: Cook - 16
பணி: House Keeper - 02
பணி: Barber - 02

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/Write Read Data/ADS/eng-10610-11-0014-2122b.pdf என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: OC, 412 MC/MF Det, Hazrat Nizamuddin, Railway Station - 110 013.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.02.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com