10.371 ஆசிரியர் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு!

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் 10,371 ஆசிரியர், பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 
10.371 ஆசிரியர் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10,371 ஆசிரியர், பேராசிரியர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின் முழு விவரம்:

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர், பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும்.

இதர பணியிடங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்ட உடன் அறிவிப்பாணை வெளியிடப்படும். 

அதாவது:

* எஸ்சிஇஆர்டி விரிவுரையாளர்கள் - 155 - ஜூலை 2022
* உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் - 1874 - செப்டம்பர் 2021
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் - 3987 - செப்டம்பர் 2022
* கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் - 1358
* பாலிடெக்னிக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் - 493
* பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் - 97

மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியானது. அதில், மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 

தற்போது ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையுள்ள தேதிகளில் தாள் 1-க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு கால அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்குவது குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 2 ஆவது வாரத்தில் வெளியிடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com