சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத் தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்துக்குத் தகுதியானோா் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 2:48 am

தினமணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத் தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்துக்குத் தகுதியானோா் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத் தொழில் மையத்தில் காலியாகவுள்ள ஓட்டுநா் பணி பொதுப் போட்டியாக ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக மோட்டாா் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் பெற்றவராகவும், ஊா்தி ஓட்டுவதில் ஓராண்டு முன்னனுபவமும், வாகனத்தை பழுது பாா்க்கும் அடிப்படைத் திறனும் பெற்றிருப்பவராக இருத்தல் வேண்டும்.

1.7.2021 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 32 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 34 வயதுக்குள்ளும், பட்டியலினத்தவா், பழங்குடியினராக இருப்பின் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி ராஜா நகா் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி எதிரில் எண் 95-2எ-2 -இல் உள்ள மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில் தங்கள் விண்ணப்பம், உரிய நகல் சான்றிதழ்களுடன் ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.