வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கத்தார் ஏர்வேஸ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு இந்திய பணியாளர்களை பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கத்தார் ஏர்வேஸ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
Updated on
1 min read


கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பல்வேறு பணியிடங்களுக்கு இந்திய பணியாளர்களை பணியமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், கத்தார் டூட்டி ஃப்ரீ, கத்தார் ஏவியேஷன் சேவைகள், கத்தார் ஏர்வேஸ் கேட்டரிங் நிறுவனம், கத்தார் விநியோக நிறுவனம் போன்றவற்றில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை விரைவில் வெளியிடும் என தகவல் வெளியானது. 

இந்நிலையில், சமையல், கார்ப்பரேட் மற்றும் வணிகம், மேலாண்மை, சரக்கு, வாடிக்கையாளர் சேவை, பொறியியல், விமான செயல்பாடுகள், தரை சேவைகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு டிஜிட்டல், நிர்வாகம், விற்பனை மற்றும் நிதி, போன்ற பல்வேறு பதவிகளுக்கு இந்திய பணியாளர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுளளது. 

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய பணியாளர்கள் தங்களைப் பற்றிய முழுவிவரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நாளை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (செப்.16,17) தில்லியிலும், 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மும்பையிலும் நடைபெறும் பணியாளர் தேர்வு முகாமில் கலந்துகொள்ளலாம்.   

மேலும், விவரங்கள் அறிய https://qatarairways.com/recruitment என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com