ரூ.56,100 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
By | Published On : 08th April 2022 01:13 PM | Last Updated : 08th April 2022 01:13 PM | அ+அ அ- |

தமிழ்நாடு சீர்த்திருந்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்பு பணிகள் அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
தகுதி: சமூகவியல் அல்லது சமூகப்பணி அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/2022_08_DCPO_tam.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.