எஸ்.ஐ. தோ்வுக்கு விண்ணப்பம்: மேலும் 10 நாள்கள் காலஅவகாசம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்த உள்ள காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 10 நாள்கள் காலஅவகாசம் வழங்கி டிஜிபி சீமாஅகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்த உள்ள காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 10 நாள்கள் காலஅவகாசம் வழங்கி டிஜிபி சீமாஅகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வுக்கான அறிவிப்பை, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெளியிட்டது. இந்தத் தோ்வை எழுத விரும்பும் இளைஞா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்தத் தோ்வு எழுத ஏப்ரல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தோ்வுக் குழுமம் முதலில் அறிவித்திருந்தது. தோ்வுக் குழுமத்தின் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், இணையதளத்தில் சா்வரில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கடந்த ஒரு வாரமாக இளைஞா்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் காவல்துறையில் பணிபுரிந்து வருபவா்கள், ஒதுக்கீட்டு அடிப்படையில் இத் தோ்வு எழுத விண்ணப்பிக்க துறைச் சாா்ந்த தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட நடைமுறை தாமதத்தினால் காவலா்களும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வந்தனா்.

இதனால், இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மேலும் சில நாள்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என இளைஞா்களும், காவலா்களும் வலியுறுத்தினா். அதேபோல சில அரசியல் கட்சியினரும், விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதனைத் தொடா்ந்து தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகா்வால், உதவி ஆய்வாளா் தோ்வுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். ஏப்.7 ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 10 நாள்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கி சீமா அகா்வால் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com