உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 150 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?


மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 150 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Central Inteligence Officer(Technical) (Grade-II)
காலியிடங்கள்: 150

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Computer Science & Information Technology
காலியிடங்கள்: 56
2. Electronics & Communication 
காலியிடங்கள்: 94

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் எம்.எஸ்சி., அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: 2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வுகளில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரர்கள் மட்டும் ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  www.mha.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com