முகப்பு வேலைவாய்ப்பு
என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் யார்?
By | Published On : 21st January 2022 12:32 PM | Last Updated : 24th January 2022 01:51 PM | அ+அ அ- |

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.01/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Service Worker/Trainee
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 30,000
பணி: Assistant Industrial Worker/Trainee(Non ITI)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 30,000
பணி: Clerical Assistant Gr.II/Trainee
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 77,000
இதற்கு விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
பணி: Junior Stenographer/Trainee
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 81,000
பணி: Data Entry Operator/Trainee
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.21,000 - 85,000
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: மேற்கண்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதால் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பணிக்கான தகுதி, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.in அல்லது https://web.nlcindia.in/rec012022/01_2022.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.