பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலையில் சிஸ்டம் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!


இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலையில் சிஸ்டம் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Systems Engineer
காலியிடங்கள்: 22
துறைவாரியான காலியிடங்கள்:
1. Mechanical - 11
2. ECE, EEE - 11
சம்பளம்: மாதம் ரூ.60,700 வழங்கப்படும்.

பணி: Systems Engineer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.60,700 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர் முதலில் டிரெய்னி சிஸ்டம் இன்ஜினியராக நியமிக்கப்பட்டு 4 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பின்னர் நிரந்த பணி வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.brahmos.com/careernew என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 21.07.2022க்கு முன்பு பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Chief General Manager, Brahmos Aerospace, Delhi Cantt, New Delhi - 110 010.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com