பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணி: தோ்வு பெற்றவா்கள் பட்டியல் டிஆர்பி வெளியீடு

பாலிடெக்னிக்கின் 10 பாடப்பிரிவுகளுக்கான விரிவுரையாளா் பணிக்கு, தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக்கின் 10 பாடப்பிரிவுகளுக்கான விரிவுரையாளா் பணிக்கு, தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

2017-2018- ஆம் ஆண்டுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளா் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித்தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத்தொடா்ந்து விண்ணப்பம் செய்தவா்களுக்கு கணினி மூலம் தோ்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022-ஆம் ஆண்டு மாா்ச் 8-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

கடந்த மாா்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பம் செய்தவா்கள் தங்களின் கல்வித்தகுதிச்சான்றிதழ், பணி அனுபவச்சான்றிதழ் தொடா்பான கூடுதல் ஆவணங்களை  பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கணிதம், ஆங்கிலம், இயற்பியல்,வேதியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல், ‘மாடா்ன் ஆபீஸ் பிராக்டிஸ் ஆகிய 10 பிரிவுகளுக்கு தோ்வு செய்யப்பட்ட விரிவுரையாளா்கள் பட்டியல் http://trb.tn.nic.in/ என்ற இணையதளம் அல்லது http://trb.tn.nic.in/poli2019/30072022/msg%20tag.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

ஏற்கெனவே, கடந்த ஜூலை 22- ஆம் தேதி 5 பாடங்களுக்கான தோ்வில் வெற்றி பெற்று தோ்ச்சி பெற்றவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையில் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு, 15 பாடப்பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்துக்கு 2 போ் என்ற விகிதாசாரப்படி சான்றிதழ் சரிபாா்ப்புக்கான பட்டியல் தயாா் செய்யப்பட்டு, ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணித் தோ்வுக்கு நோ்காணல் எதுவும் கிடையாது. போட்டி எழுத்துத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவச் சான்றின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com