குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: விண்ணப்பிப்பதில் சிக்கல்?

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட குரூப் 2, குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளுக்கு  முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (மார்ச்.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: விண்ணப்பிப்பதில் சிக்கல்?

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட குரூப் 2, குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளுக்கு  முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (மார்ச். 23) கடைசி நாளாக உள்ள நிலையில் விண்ணப்பிப்பதில் சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சாா்பதிவாளா் உள்பட 5, 400-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாதம் புதன்கிழமை (பிப்ரவரி.23) வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தின் (www.tnpsc.gov.in) வழியே விண்ணப்பிக்கலாம் எனவும், மாா்ச் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது. 

குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் உள்ள பணியிடங்கள் நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தோ்வானது முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்முகத் தோ்வு என்ற நிலைகளைக் கொண்டது. குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வில் 116 நோ்முகத் தோ்வினைக் கொண்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சிறைத் துறை நன்னடத்தை அலுவலா், தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா், பதிவுத் துறையின் சாா் பதிவாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் சிறப்பு உதவியாளா், காவல் ஆணையாளா் அலுவலகம், குற்ற புலனாய்வுத் துறை சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் தனிப் பிரிவு உதவியாளா் என மொத்தம் 116 பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இதில், தனிப் பிரிவு உதவியாளா், சிறப்பு உதவியாளா் பணியிடங்கள் 59 புதிதாக உருவாக்கப்பட்டு அவை குரூப் 2 பிரிவில் நோ்முகத் தோ்வாகச் சோ்க்கப்பட்டுள்ளன.

குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் நோ்முகத் தோ்வுகள் அல்லாத பணியிடங்களும் உள்ளன. இதில், முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுகளை மட்டும் எழுத வேண்டும். நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா், வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் உதவியாளா் என 5 ஆயிரத்து 297 பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளன. நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத வகைகளில் மொத்தமாக 5 ஆயிரத்து 413 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற இருக்கிறது.

மே 21-ஆம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறும். முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதன்மைத் தோ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் வெளியிடப்படும் என தோ்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதாவதொரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள்  விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. 

விண்ணப்பிப்பதில் சிக்கல்? குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (மார்ச் 23) கடைசி நாள் உள்ள நிலையில், விண்ணப்பிப்பதில் சில கோளாறுகள் ஏற்படுகின்றன. 


அதாவது, அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தின் இணையதளத்தில் ஒரு முறை பதிவு செய்யும்போது கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதனால் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்வுக்கு விண்ணப்பிப்போர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பணியாளர் தேர்வாணையம் தேர்வர்களின் கோரிக்கையை பரிசீலிணை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com