சமூக ஊடகங்களில் பரவி வரும் குருப் -4 தேர்வுக்கான அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 குறித்த தவறான அறிவிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ளவேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது.
தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி -4-க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.