ரூ.2 லட்சம் சம்பளத்தில் பேரவை செயலகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 628

அறிவிப்பு எண்.24/2022

பணி: English Reporter
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.56,000 - 2,05,700
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 180 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் சீனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tamil Reporter
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நிமிடத்திற்கு 180 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழ் தட்டச்சில் சீனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2022

பதிவுக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம்:
பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/REPORTER%20ENGLISH.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com