மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

திட்ட உதவியாளர், இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

சென்னை அடையாரில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 06/2024

பணி: Project Assistant

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.20,000 + எச்ஆர்ஏ

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பயோமெடிக்கல் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது லெதர் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு
காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

பணி: Project Associate -I

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ

தகுதி: லெட்தர் டெக்னாலஜி, இசிஇ, மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல், நானோடெக்னாலஜி, பாலிமர் சயின்ஸ், பெட்ரோ-கெமிக்கல், மெட்ரியல் சயின்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Research Fellow

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ

தகுதி: வேதியியல், நானோடெக்னாலஜி.பாலிமர் சயின்ஸ், பயோ-வேதியியல் போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு
தமிழக அரசு மருத்துவமனைகளில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 22.4.2024 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

நேர்முகத் தேர்வு சென்னை அடையாரில் உள்ள சிஎல்ஆர்ஐ மையத்தில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com