
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager(Metalurgy Mechanical)
காலியிடங்கள்: 34
சம்பளம்: மாதம் ரூ.23,340 - 42,478
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanical, Metallurgical, Production, Automobile, Manufacturing போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager(Electrical. Electronics)
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.23,340 - 42,478
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electrical, Electronics, Power Supply, Instrumentation, Power Electronics, Digital Electronics போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager(Civil)
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.23,340 - 42,478
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager(IT/CS)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.23,340 - 42,478
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CSE, IT, ECE, Computer Technology, Computer Application, Electronics, Telecommunication, Instrumentation போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக்., எம்.எஸ்சி, எம்சிஏ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு 28.4.2024 அன்று நடைபெறும்.
நேர்முகத் தேர்வு 9.5.2024 அன்று நடைபெறும். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு http://www.rites.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.