
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்.
பணி: System Administrator - 2
பணி: Network Administrator - 2
பணி: Information Security Specialist - 2
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, Information Technology, Electronics and Communication அல்லது Computer Application பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Information Security, System Security தொடர்பான படிப்பில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnscbank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்து செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Managing Director, Tamilnadu State Apex Co-operative Bank Ltd, No.4(Old No.233), N.S.C.Bose Road, Chennai - 600 001.
தொலைபேசி எண். 044-25302359,25302335
இ-மெயில் முகவரி: itrecruitment@tnscbank.com
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.