பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 200 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளநிலை உதவியாளராக தேர்வு மற்றும் நியமனம். காலியிடங்கள் பின்வருமாறு:
பணி: Junior Assistants
காலியிடங்கள்: 200
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
ஆந்திரம் - 12, அசாம் - 5, சத்தீஸ்கர் - 6, குஜராத் - 5, ஹிமாச்சல பிரதேசம் 3,ஜம்மு மற்றும் காஷ்மீர் - 1, கர்நாடகம் - 38, மத்தியப் பிரதேசம் - 12, மகாராஷ்டிரம் - 53, புதுச்சேரி - 1, சிக்கிம் - 1, தமிழ்நாடு - 10, தெலங்கானா - 31, உத்தரப்பிரதேசம் - 17, மேற்கு வங்கம் - 5,
சம்பளம்: மாதம் ரூ. 20,000 - 32,800
தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எல்ஐசி நிறுவனத்தால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள், தேர்வு நேரம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு தோராயமாக செப்டம்பர் மாதம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, தஞ்சாவூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.