என்எல்சி-இல் ஐடிஐ, பிளஸ் முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி!

பொதுத்துறையைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஐடிஐ, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
Published on
Updated on
1 min read

பொதுத்துறையைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஐடிஐ, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Trade Apprentice

காலியிடங்கள்: 412

துறைவாரியான பயிற்சி அளிக்கப்பட்டும் காலியிடங்கள் விவரம்:

1. Medical Lab Technician(pathology) - 5

2. Medical Lab Technician(Radiology) - 3

3. Fitter - 62

4. Turner - 25

5. Welder - 62

6. Mechanic(Motor Vehicle) -62

7. Mechanic(Motor Diesel) -5

8. Mechanic(Tractor) - 3

9. Electrician - 87

10. Wireman - 62

11. Plumber - 3

12. Carpenter - 3

13. Stenographer - 10

14. Computer Opeator and Programming Assistant(COPA) - 20

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எம்எல்டி பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.8,766, அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.

பயிற்சி காலம்: ஐடிஐ முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டும், எம்எல்டி பயிற்சிக்கு 15 மாதங்கள்.

வயதுவரம்பு: 1.4.2024 தேதியின்படி 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, பிளஸ் 2 படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
தமிழக அரசு துறைகளில் 861 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 19.9.2024 தேதி வெளியிடப்படும். பயிற்சி 30.9.2024 முதல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் மதிப்பெண் பட்டியல், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, முன்னாள் ராணுவவீரரின் வாரிசு சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், நில எடுப்பு குறித்த விவர படிவும், நோட்டரி பப்ளிக் மூலம் நிலத்திற்கான இழப்பீட்டு தொகை பெற்றவரின் சட்டப்பூர்வ வாரிகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் போன்ற தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பொது மேலாளர், நிலத்துறை, என்.எல்.சி இந்தியா நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி - 607 803

மேலும் விவரங்கள் அறிய www.nlcindia.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com