பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி இன்ஜினியர், புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி இன்ஜினியர், புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 6050/TE-I/PE-I/HR/PDIC/2023-24

பணி: Trainee Engineer-I

துறைவாரியான காலியிடங்கள்:

1. Electronics - 26

2. Mechanical - 3

3. Computer Science - 4

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.30,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.35,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.40,000 வழங்கப்படும்.

பணி: Project Engineer-I

துறைவாரியான காலியிடங்கள்:

1. Electronics-16

2. Science - 6

தகுதி: தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.55,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.12024 தேதியின்படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு பெங்களூருவில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: டிரெய்னி இன்ஜினியர் பணிக்கு ரூ.150, புராஜெக்ட் பணிக்கு ரூ.400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.2.2024

மேலும் விவரங்கள் அறிய https://bel-india.in/Documentviews.aspx?fileName=FinaladvertisementforWebsite-22-01-24.pdf என்ற லிங்கில் சென்று படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com