விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் வேலை!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு
சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்.
சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வுக்கு தகுதியானவர் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பு எண்.01/2024

தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, சென்னை மாநகராட்சி, சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் (Secondary Grade Teacher) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தகுதி: விண்ணப்பதாரா் பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியா் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்; ஆசிரியா் தகுதித் தோ்வு (‘டெட்’) முதல் தாளில் தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்.
வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு!

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி பொதுப்பிரிவினர் 53 வயதிற்குள்ளும், இதர பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் 58 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.300. இதர பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: போட்டித் தோ்வு எழுத விரும்பும் தகுதியான விண்ணப்பதாரா்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்.
ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செய்யப்படும் முறை: போட்டி எழுத்துத் தோ்வில் பெறும் மதிப்பெண்ணுடன் ஏற்கெனவே ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண்களும் சோ்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னா் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு தொடக்க கல்வித் துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.06.2024. தேர்வு நடைபெறும் இடம், தேர்வு மைய முகவரி போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.03.2024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com